குறைந்த விலையில் ஸ்மார்ட் போனை தயாரிக்கும் பணிகளை தென்னாபிரிக்கா மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, 30 அமெரிக்க டொலர் பெறுமதியில் தென்னாபிரிக்காவில் ஸ்மாட் போன் தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குறைந்த விலையில் ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக கையடக்கத்தொலைபேசி தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.
தென்னாபிரிக்காவின் ஜொஹான்ஸ்பேர்க் நகரில் தயாரிக்கப்படவுள்ள குறித்த கைத்தொலை பேசியில் 4 அங்குல திரை வசதியுடன், முன்பக்க மற்றும் பின்பக்க கமராக்கல் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிநுட்ப வசதிகள் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

