பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் யூனிஸ் கான் தமது ஓய்வினை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் அணியில் விளையாடிவரும் நிலையில் தனது ஓய்வினை அறிவித்துள்ள அவர், ஓய்வுக்குப் பின்னர் பாகிஸ்தானின் இளையோர் அணிக்கு ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் விளையாடிவருகிறார்.
யூனிஸ் கான், 10ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதலாவது பாகிஸ்தான் வீரராவார்.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தற்போது இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

