சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரம்

230 0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுசெயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானமே இறுதியான தீர்மானமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.