வெசக் தின தானசாலை நிகழ்வுகள் – பொலீத்தின் தாள்களை தவிர்க்கவும்

181 0

வெசக் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலை நிகழ்வுகளுக்காக பொலீத்தின் தாள்களை (லன்ச் சீட்) பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய சங்க அமைப்பின் ஏற்பாட்டாளர் முதிவங்ச தேரர் பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.