இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்தனர்.

212 0

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கிலேயே இலங்கை ஊடாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கியர்கள் தொடர்பில் தமிழக காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின்போது, அவர்கள் அவுஸ்திரேலியாக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த ரோஹிங்கிய அகதிகள் 30 பேரும் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததுள்ளனர்.

பின்னர் கடந்த வருடத்தில் அவர்கள் தமிழகத்துக்கு வந்து அதிரம்பட்டினத்தில் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில், அங்கிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முகவர் ஒருவர் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, குறித்த அகதிகளி;ன் சட்டவிரோத பயணத்துக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அதிரம்பட்டினத்தில் வசிக்கும் இருவர் தமிழக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.