யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…..(காணொளி)

422 0

 

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்;புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் தொண்டர்களாக 5 வருடங்களுக்கு மேலாக தாங்கள் 303 பேர் கடமையாற்றிவரும் நிலையில், இதுவரை தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் இன்று முன்னெடுத்துள்ள குறித்த போராட்டத்தை தமக்கு உரிய பதில் கிடைக்கும்வரையில் தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.