நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க முடியாது என நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது தனக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த தீர்ப்பானது கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக தன்க்கு கிடைக்கும் பட்சத்தில் கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கீதா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையால் அவருக்கு வரி விலக்களிப்புடன் வழங்;கப்பட்டுள்ள வாகனத்திற்கான வரியினை அறவிடுமாறு கபே அமைப்பு திறைசேரியின் செயலாளருக்கும் சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

