பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிதாக 3000 பணியாளர்கள்

336 0

உலகம் முழுவதும் 150 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் நாளுக்கு நாள் புதிய விடயங்களை புகுத்தி வரும் நிலையில்,அண்மையில் நேரலை வீடியோ வசதியையும் பயனாளர்களுக்கு வழங்கியது.

இதனையடுத்து பல நாடுகளில் தற்கொலைகளையும் நேரலை ஒளிபரப்பு செய்யும் நிலைக்கு பேஸ்புக் பயனாளர்கள் சென்றுள்ளமையானத பலரையும் அதிர்ச்சியி;ல் ஆழத்தியுள்ளது.

அத்துடன் அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் ஏனைய நபர்களை கொல்லும் காட்சியும் நேரடியாக பேஸ்புக் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எனவே இதனைக் கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனத்திற்கு 3000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

அதன்படி 3000 புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக மேற்கண்ட வீடியோக்களை கட்டுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளால் பதிவேற்றப்படும் வீடியோக்களில் முகம்சுளிக்கக் கூடிய வகையிலான வீடியோக்களை வலைதளத்திலிருந்து நீக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இது போன்ற வீடியோக்களை கட்டுப்படுத்திஇ நீக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்க இருப்பதாகவும் மார்க் ஸக்கர்பெர்க் முதலீட்டாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.