நாடளாவிய ரீதியில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டங்கள்(காணொளி)

373 0

நாடளாவிய ரீதியில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் பெறுவதற்கான வியாபார திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“சுய சக்தி” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை நோக்கிய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மூலம் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “சுய சக்தி”  தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் பெறுவதற்கான வியாபார திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், மண்முனை வடக்கு மற்றும் மண்முனைபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, சிறு தொழில் முயற்சியாளர்களில் தெரிவுசெய்யப்படவர்களுக்கான “சுய சக்தி” கடன் திட்டம் பெறுவதற்கான வியாபார திட்டம் தயாரித்தல் தொடர்பான 2 நாள் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.வினோத் ஒருங்கிணைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.