புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் – தீர்மானம் இந்த மாத இறுதியில்

402 0

புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பான தீர்மானம், இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்யக்கோரி தேர்தல்கள் திணைக்களத்துக்கு 95 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவை தொடர்பான நேர்முகத் தேர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியாக பதிவு செய்யக்கோரி பிக்குகள் சிலராலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படுகின்ற நிலையில், நாட்டில் இதுவரை 64 அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.