இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தல்

463 0

கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அங்குள்ள தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தியுள்ளது.

கனடாவின் ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கனடாவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்-கனேடிய வர்த்தக உரிமையாளர்கள் அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட பலத் தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள், வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இதற்கமைய, முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய முடியும் என்று தமிழ் கனேடிய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.