அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நிறுவப்படவுள்ள பிரிவு குறித்த இறுதித் தீர்மானமொன்றை எடுக்க குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் குழுவை அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு அமைய குறித்த பிரிவை உருவாக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவையில் இணங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் பிரிவின் ஊடாக தொழிற்சங்களின் உரிமைகள் ஒருபோதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பட்டுள்ளார்.
மேலும், எவருக்கும் பதவிகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
மக்களின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.