உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

222 0

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அமெரிக்காவில் இடம்பெரும் சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு, கம்மன்பில தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இம் மாதம் 18ம் திகதி முதல் 24ம் திகதி வரை இவர் வௌிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி கே.கே.ஆர்.ஹெய்ந்துடுவ இதற்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த கம்மன்பிலவின் கடவுச்சீட்டு இரண்டு இலட்சம் ரூபா தனிநபர் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு திரும்பியதும் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.