இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம்

218 0

தெற்­கா­சிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்­பான அபி­வி­ருத்­தியை அடைந்­தி­ருக்­கின்­றன. ஆனால் இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

தெற்­கா­சிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்­பான அபி­வி­ருத்­தியை அடைந்­தி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மாக தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் சர்­வ­தேச வர்த்­த­கத்தை பெரு­ம­ளவில் ஈர்க்­கக்­கூ­டி­ய­தாக அமைந்­துள்­ளது. இருப்­பினும் குறித்த செயற்­பா­டு­க­ளுக்கு தெற்­கா­சிய நாடு­களில் உள்ள துறை­மு­கங்­களில் நிலவும் குறை­பா­டுகள் முன்­னேற்­றத்­திற்கு பெரும் தடை­யாக இருக்­கின்­றது.

கொள்­க­லன்­களை கையாளும் பணியில் உயர்­வான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சில நாடுகள் முயற்­சித்­துள்­ளன. இருப்­பினும் பொது­வாக இந்த நட­வ­டிக்­கைகளில் தாம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதன் ­கா­ர­ண­மாக தொழில்­நுட்பம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான செல­வுகள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடு­களில் கொள்­க­லன்­களை கையாளும் துறை­மு­கங்கள் உயர்­வான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

ஆனாலும் கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். ஏனெனில் அபி­வி­ருத்­திக்கு அனைத்து துறை­யி­லி­ருந்தும் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­பட வேண்டும். அவ்­வாறு அபி­வி­ருத்­தியில் ஒரு துறை அதிகம் தாக்கம் செலுத்­து­மாயின் மற்­றைய துறைகள் பாரிய பின்­ன­டைவை சந்­திக்க நேரிடும். இதனை தெற்­கா­சிய நாடுகள் நன்கு உணர்ந்­து கொண்­டுள்­ளன. கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக ஏனைய பிராந்­தி­யங்­களை விட தெற்­கா­சிய நாடு­களின் பொரு­ளா­தார பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­ன­தாக இருந்­துள்­ள­தாக குறிப்பிடப்பட்டுள்ளது.