ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று வசந்த சமரசிங்க சாட்சியம்

204 0

மத்திய வங்கியின் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினருமான வசந்த சமரசிங்க இன்று ஆஜராகவுள்ளார்.

இவர் தனக்கு சாட்சி வழங்க அனுமதிக்குமாறு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், இதற்கேற்ப, ஆணைக்குழு இவரை இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சானக டி சில்வா, மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யு.ஏ. விஜேவர்தனவிடம் இன்று குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் பின்னர், வசந்த சமரசிங்கவிடம் சாட்சி வினவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழு இன்று காலை 10.00 மணிக்கு அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே. ரி. சித்துசிறியின் தலைமையில் கூடவுள்ளது.