‘நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க ஆர்வம்’-சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

310 0

தற்போதுள்ள அரசியல்வாதிகள், தங்களுடைய, கல்வியறிவில்லாத, நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு, பல்வேறு பதவிகளை வழங்குவதற்கு முயன்று வருவதாக, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பெண் சாரணியர் சங்கத்தினால், நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   கல்வியறிவுள்ள, நுண்ணறிவுள்ளவர்கள், பதவிகளைப் பெற்று, நாட்டுக்குப் பயனுள்ள பிரஜைகளாக வருவதை, இவ்வாறான அரசியல்வாதிகள் தடுத்துள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

இதன்போது, எதிர்காலத்தில் நாட்டின் தலைமைத்துவத்தைப் பெறத் தகுதியுள்ள, கல்வியறிவும் திறனும் உள்ள பெண்களை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகள் தொடர்பாக, பெண் சாரணியர் சங்கத்துக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, அரசியலைப் பின்தங்கி, நாட்டுக்குச் சேவைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.