நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வௌிநாட்டு பிரஜைகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சவூதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை ஹிக்கடுவை, நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில் வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.

