மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மன்னாருக்குச் சென்று முல்லைத்தீவு திரும்பிய போதே அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வெள்ள வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் குடும்பத்தினர் மன்னாரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியுள்ளனர். மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியில் 9ஆம் கட்டைப் பகுதியில் அவர்கள் பயணித்த மோட்டார் வீதியோரம் இருந்த பாதுகாப்பு கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற சமயம் மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளனர். விபத்தில் தாயும் மகளும் வீதியோரத்திலிருந்த 8 அடி பள்ளத்துக்குள் தூக்கி வீசப்பட்டனர்.
கணவன் மயக்கமடைந்தார். விபத்துக்குள்ளான மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றன” என்று ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

