நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

336 0

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படாத பெரும்பாலான அமைப்பாளர்களே அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் பொறுப்புகளை ஏற்றிருந்த போதும் கடந்த காலங்களில் தமது பொறுப்புக்களில் இருந்து அவர்கள் விலகியிருந்ததாக எஸ்.பி.திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விலகியிருந்த மேலும் சில மக்கள் பிரதிநிதிகள் சிலர் தொடர்பாக எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.