சைட்டத்திற்கு எதிராக ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

268 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.

மே மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள், ஒரு நாளில் நாடாளாவிய ரீதியில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆசிரியர், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.