எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்கவிற்கு அனுராதபுர மேல் நீதிமன்றத்தினால், வழங்கப்பட்டுள்ள பிணையினை நீக்குவதற்கு காவல்துறை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய காவல்துறையின் வழக்குகள் தொடர்பான முகாமைத்துவ பிரிவு மாகாண மேல் நீதிமன்றத்தில் விரைவில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் இரவு நேர விடுதி ஒன்றின் உரிமையாளராகி கராத்தே வசந்த என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இவர், கடுமையான நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் அதிசொகுசு வாகனம் ஒன்றை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, அவர் வசமிருந்த கைக்குண்டு ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த செயல்பாட்டின் மூலம் எஸ்.எப். லொக்கா நீதிமன்ற நிபந்தனைகளை மீறியுள்ளதன் காரணமாக, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையினை நீக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

