வட கொரிய இராணுவ அணிவகுப்பில் போலி ஆயுதங்கள் – அமெரிக்கா

195 0

வட கொரியாவில் அண்மையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்கள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்கள் பல போலியானவை என அமெரிக்க முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி மைக்கல் பிரீஜென்ற் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல் நகைப்பிற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியா வசம் போலி கனரக ஆயுதங்கள் பல உள்ளதுடன், அந்நாட்டு இராணுவத்தில் பல மில்லியன் உறுப்பினர்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1939 ஆம் ஆண்டு வட பிரான்சில் உள்ள கென்ற் கரையில் ஆரம்பமான யுத்தத்தின் போது, டன்லப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஏராளமான போலி யுத்த தாங்கிகள் உண்மையான தாங்கிகளுடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் யுத்த வாநூர்திகள் அதிக குண்டுகளை விரயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை பின்னர் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.