தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள்

307 0
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை இல்லாதொழித்து, அவர்களை அச்சுறுத்த இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் குறிப்பிடுவது தவறாகும்.
அவ்வாறு நடைபெறாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்களால் அரசாங்கம் அசௌகரியத்துக்கு உள்ளாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.