குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

296 0

குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுவதில், பாடசாலை மாணவர்களை செயன்முறை ரீதியாக தொடர்புபடுத்திக்கொள்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கமைய, 45 லட்சம் பாடசாலை மாணவர்களை இந்த வேலைத்திட்டத்தில் நேரடியாக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.