கொரிய மொழி பரீட்சை இன்று இடம்பெறுகின்றது.
இந்த முறை பரீட்சைகளை இணையம் ஊடாக மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி பரீட்சைகள் பன்னிப்பிட்டியவில் உள்ள கொரிய மொழி மத்திய நிலையத்தில் இன்று முதல் நான்கு மாதங்களுக்கு இடம்பெறும்.
நாளொன்றுக்கு 320 பரிட்சார்த்திகள் மாத்திரம் பரிட்சைக்கு தோற்ற முடியும்.
இந்த முறை 22 ஆயிரத்து 888 விண்ணப்பதாரிகள் கொரிய மொழி பரிட்சைக்கு தோற்ற தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

