மேதினத்தில் கலந்துக்கொள்வதற்காக எந்தவொரு கட்சியும் உரிய பணத்தினை செலுத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினைப் பெற்றக்கொள்ளலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிரிவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சகல இலங்கை போக்குவரத்து சபையின் பிரதேச காரியாலயங்களையும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தூர பிரதேசங்களிலுள்ளவர்கள் மே முதலாம் திகதிக்கு முதள் நாளே பஸ்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

