முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய புதிய பிரிவு ஒன்றை அமைத்து அதன் பிரதானியாக பீல்ட்மாசல், அமைச்சர் சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
இதனிடையே, இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, இன்று போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே இவ்வாறு பில்ட்மாசலுக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் யுத்தம் இடம்பெறவில்லை, இந்தநிலையில், இந்த பதவி எதற்கு என கேள்வி எழுப்பிய மகிந்த ராஜபக்ஷ இது பழிவாங்கம் அரசியல் செயற்பாடே என குறிப்பிட்டார்.

