இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால இன்று மாலை பதவி விலகியதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.
அவரது பதவி விலகல் கடிதம் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

