ஆட்சி கவிழ்பு குற்றச்சாட்டின் பேரில் துருக்கிய காவல்துறையினர் சந்தேகத்தின் பேரின் மேலும் ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிவுற்றது.
அந்த சம்பவம் தொடர்பிலேயே அந்த நாட்டு காவல்துறையினர் ஆயிரம் பேரை கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மேலும் 2 ஆயிரத்து 200 பேரிடம் இரகசிய வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க, அமெரிக்காவில் தஞ்சம் பெற்றுள்ள துருக்கிய இஸ்லாமிய மதகுரு ஒருவர் தலைமையிலான இயக்கம் முயற்சித்தது.
எனினும் மக்களி உதவியுடன் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஜனாதிபதி ஏர்டோகன் பொது ஜன வாக்களிப்பில் வெற்றிப்பெற்றதுடன் தமது அதிகாரத்தையும் அதிகரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

