ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது.
அனைத்து னாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் என்பன இணைந்து இந்த கூட்டத்தொடரை ஏற்பாடு செய்துள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அனைத்து பாராளுமன்றங்களினதும் ஒன்றிய தலைவர் சபர் சவுத்ரி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மேக் கவ்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.

