வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்படவுள்ள நூறு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்ததினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட வெல்லாவெளி பிரதேசத்தில் வீடமைப்புத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
22 மாதிரிக் கிராமங்களில் ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
இதன் கீழ் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவேகானந்தபுரம், கண்ணபுரம் கிழக்கு ஆகிய பகுதிகளில் மாதிரி கிராமங்களைக் கொண்ட வீடமைப்புத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

