ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக 17 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டக்காட்டியுள்ளது.
இதன்போது, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர போன்றோரும் உடனிருந்தனர்.
இதேவேளை, முன்னதாக அக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக இருந்த ஜனக பண்டார தென்னக்கோனுக்கு பதிலாக இணை அமைப்பாளர்களாக எம்.யசமான மற்றும் யூ.ஆர்.தயா நந்தசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாததும்பர ஆசன அமைப்பாளராக சமரஜீவ பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதுவரை அப் பதவியில் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்தவத்த செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே வகித்து வந்த தொகுதி அமைப்பாளர் பதவி கே.பி.குணவர்த்தனவுக்கு அளிக்கப்பட்டுள்ளது

