மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல்  (காணொளி)

401 0

 

இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில்  செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.

இலங்கையில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திட்டம் மற்றும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான திட்டம் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம மட்டத்தில் இலங்கை சமாதான பேரவையின்    குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக, இன நல்லிணக்க செயல்பாடுகள் தொடர்பாகவும் அடுத்த ஆறுமாத காலத்தில் கிராம மட்டத்தில்  மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டம்  மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை சமாதான பேரவையின் திட்ட இணைப்பாளர் விஜயநாதன் துஷேந்திரா, மட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழு தலைவர்கள், அரசசார்பற்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.