பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் செயற்பாடு

230 0

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் தொழிற்படுவதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டு டொனால்ட் ட்ரம்ப்பை வெற்றி பெறச் செய்ததாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், தற்போது பிரான்ஸ் தேர்தலை அவர்கள் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இமானுவேல் மெக்ரோனை இலக்கு வைத்து ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் தொழிற்படுவதாக கூறப்படுகிறது.