நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க சட்டத்தில் திருத்தங்கள் – ஜனாதிபதி

351 0

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறிவார்ந்த இளைஞர்கள், அரச மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.