சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல்

323 0

சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் ஒரு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவ்வப்போது குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு நேற்றையதினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.