பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை இன்று மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பெருந்தெருக்கள் துறை அமைச்சர் நிட்டின் கட்காரி உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது இலங்கை இந்திய ராஜதந்திர உறவுகள், வர்த்தக தொடர்புகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

