வெசாக் தினத்திற்கு முன்னர் தெருநாய்களை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பொய் என உள்ளூராட்சி மற்றும் மாநகரசபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாநகரசபை அமைச்சே தெருநாய்களை கொலை செய்யும் முடிவை எடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த செய்தி பொய்யானது என அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
நான் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். எனது நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் சில சமூக ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தெருநாய்களை கொலை செய்வதற்கு பதிலாக அவற்றை பாதுகாப்பது தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பேன் எனவும் பைஸர் கூறியுள்ளார்.

