அரசாங்கத்தின் வருமானம் குறைந்தாலும் சமூகத்தில் அதிகளவானோர் அருந்து தென்னம் மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என தாம் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைப்பதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இன்று அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க, மாகாண சபை உறுப்பினர் சிறிபால கிரியெல்ல ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

