ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்க்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

298 0

தமது வேலை நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தராவிட்டால் தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று பிற்பகல் விடையாய் பொறுப்பு அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இறுதித்தீர்வு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.