பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளை பெற்றுக் கொள்வதை காண முடிந்தது.இந்நிலையில் சற்று முன்னர்முல்லை நகரில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள் பெற்றோல் முடிவடைந்த நிலையில் ஏமாற்றத்துடன் செல்வதை அவதானிக்க முடிந்தது.

