மலேரியா மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது!

306 0

மலேரியா நோய் மீண்டும் ஏற்படாதிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மலேரியா தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பினரால் மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதோடு, உலகின் பல நாடுகளில் இன்னும் இந்த நோயின் தாக்கம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், சுற்றுலாவுக்காக வருபவர்களினால் மீண்டும் நாட்டில் மலேரியா ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித்த, மலேரியா ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக பாரிய நிதியை ஒதிக்கி, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.