நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை!

290 0

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை – கரதியான குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழு பேரை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று கெஸ்பேவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்  லக்ஷ்மன் நிபுனஆராச்சி உள்ளிட்ட எழுவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை – கரதியான குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17 ஆம் திகதி பிரதேச மக்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.