டெங்கு நோயை கட்டுப்படுத்த இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

264 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்பு நிபுணர் என். தர்சிகா வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாவட்டத்தில் டெங்கு பெருக்கத்திற்கு பிரதான காரணம் தண்ணீர்தாங்கிகள் மற்றும் கிணறுகள் பாதுகாப்பாக நுளம்பு வலைகள் கொண்டு மூடாமையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் 75 சத வீதமான டெங்கு பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஆரையம்பதி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 50 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இன்று முழு நாழும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.