அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது – உயர் கல்வி அமைச்சர்

204 0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, நாட்டின் மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

மருத்துவ கல்வி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அந்த அதிகாரமும் இல்லை.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது ஒரு தொழிற்சங்கமே எனவும் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.