நுவரெலியா மாவட்ட பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்(காணொளி)

272 0

 

நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்னவு செய்யாத காரணத்தால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் லீற்றர் பால், சேகரிப்பு நிலையங்களில் தேங்கி கிடப்பதாகவும் அவை தற்போது பழுதடையும் நிலையில் இருப்பதாகவும் பாற்பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நுவரெலியாயில் பசும் பால் வழங்கப்பட்டு வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் பால் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதால், பிரதான பால் சேகரிப்பாளர்களும் பால் கொள்வனவை நிறுத்தியுள்ளனர்.

இதனால் பத்தாயிரம் லீற்றர் பால் வீணாக ஓடைக்குள் ஊற்றப்பட்டதால், பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் 09 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினமும் பசும் பால் கொள்வனவு செய்யாவிட்டால் தேங்கி கிடக்கும் பாலை வீதியில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பால் சேகரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.