சம்மாந்துறை நிந்தவூர் 6 பிரதேசத்தில் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் பாண் வாங்குவதற்காக வந்த பெண்ணொருவருடன் வந்த குழந்தையொன்றே இவ்வாறு வாகனத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் வயது 1 வருடங்களும் 6 மாதங்களும் ஆகும்.
குழந்தை வாகனத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில் , நிந்தவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் நிந்தவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் சிறிய ரக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

