மக்களுடைய காணிகளை உடனடியாக விடுவிக்குக – தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து

306 0

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுடைய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரச படையினரால் உபயோகிக்கப்பட்ட மக்களது காணிகள் உரியவர்களுக்கே மீள வழங்கப்பட வேண்டுமென்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் போராடும் அமைப்புக்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில் கத்தோலிக்க திருச்சபையினரும் இதுபற்றி ஆழமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கம் தாமதமின்றி மக்களுடைய விருப்பத்திற்கு இசைய வேண்டுமென ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.