தடைசெய்யப்பட்ட களை நாசினிகள் மீட்பு

376 0

க்லைஃபோசேட் (Glyphosate) எனப்படும் தடைசெய்யப்பட்ட இரசாயன கலவை அடங்கிய 32 ஆயிரம் லீற்றர் களை நாசினி மீட்கப்பட்டுள்ளது.

இந்த களைநாசினி கிரேன்டபாஸ் சுங்கபிரிவு அதிகாரிகளால் நேற்று கைப்பற்றப்பட்டது.

160 கொள்கலன்களில் நிரப்பப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த களைநாசினி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இந்த களைநாசினி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் தர்மசேன கஹந்தவ குறிப்பிட்டார்.

க்லைபோசேட் எனப்படும் குறித்த இரசாயனம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக குறித்த களைநாசினி கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.