ஜி.எஸ்.பி.பிளஸ் இற்கு முன்னர் பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்- ஐரோப்பிய யுனியன்

245 0

ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை வழங்கப்படுமுன்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்குமாறு னினால் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பு ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைக்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி கிரிஸ்டோபர் ஜெலின்ஜர் எனும் பெயரையுடைய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரினால் எனவும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பில் மேற்கொள்ளப் போவதாக கூறிய விடயங்களிலும் கரிசனை காட்ட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்திய பின்பே ஜி.எஸ்.பி.பிளஸ் குறித்த முன்னெடுப்புக்கள் பற்றி கருத்தில் கொள்ளப்படும் எனவும் ஐ ரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரிச் சலுகை எதிர்வரும் மே மாதம் கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.